Home இலங்கை அரசியல் கஜேந்திரகுமார் தலைமையில் புதிய கூட்டணி

கஜேந்திரகுமார் தலைமையில் புதிய கூட்டணி

0

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள்
இணைந்து புதிய கூட்டொன்றை உருவாக்கியுள்ளன.

இந்தப் புதிய கூட்டானது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் வடக்கு, கிழக்கு முழுவமும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில்
போட்டியிடுகின்றது.

இந்தக் கூட்டில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கட்சி,
தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஐனநாயகத் தமிழரசு, தமிழ் மக்கள் கூட்டணியில்
இருந்து பிரிந்த அருந்தவபாலன் அணி ஆகிய தரப்புக்கள் அங்கம் வகிக்கின்றன.

காலத்தின் கட்டாய தேவை

மேற்படி கட்சிகள் இணைந்து நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில்
போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துள்ளன.

இந்தப் புதிய கூட்டு உருவாக்கம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட
பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேற்படி கட்சிகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக
சந்திப்பை நடத்தியுள்ளன.

இதன்போது நேர்மையான புதிய கூட்டு காலத்தின் கட்டாய தேவை என்று மேற்படி
கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலதிக தகவல் – ராகேஷ் 

NO COMMENTS

Exit mobile version