ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணி
இந்த புதிய கூட்டணி நாளை (14) அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக இன்று (13) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க குறித்த குழுவினர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.