Home இலங்கை சமூகம் கடமைகளை பொறுப்பேற்ற திருகோணமலை மாவட்ட புதிய உதவி தேர்தல்கள் ஆணையாளர்

கடமைகளை பொறுப்பேற்ற திருகோணமலை மாவட்ட புதிய உதவி தேர்தல்கள் ஆணையாளர்

0

Courtesy: H A Roshan

திருகோணமலை மாவட்டத்தின் புதிய உதவி தேர்தல்கள் ஆணையாளராக எஸ். கே. டி. நிரஞ்சன் திருகோணமலை மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் நேற்று (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

பதவி நியமனம் 

திருகோணமலை மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்று, பின்னர் தனது முகாமைத்துவ பட்டத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார்.

நிர்வாக உத்தியோகத்தராக இவர் கிண்ணியா பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றி உள்ளார்.

அதனையடுத்து மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவை பரீட்சையிலே சித்தியடைந்து தெரிவு செய்யப்பட்ட இவர் கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் உதவி செயலாளராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version