இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால (K.T.M. Udayanga Hemapala) நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயங்க ஹேமபால, இலங்கை வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளராக பணியாற்றியிருந்தார்.
புதிய தலைவர்
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றி வந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் பதவி விலகல் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர் சியம்பலாபிட்டிய மே 11 அன்று இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
