Home இலங்கை அரசியல் லங்கா சதொசவின் புதிய தலைவர் நியமனம்

லங்கா சதொசவின் புதிய தலைவர் நியமனம்

0

லங்கா சதொசவின்(Lanka Sathosa)புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா(Samitha Perera) நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்றைய தினம் (04.10.2024) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன், அவரது நியமனம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் (Harini Amarasuriya)வழங்கப்பட்டுள்ளது.

விரிவான நிபுணத்துவம்

லங்கா சதொசவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பெரேரா வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) துறையில் பல தசாப்த கால அனுபவத்தை கொண்டவர் என்பதுடன் இதற்கு முன்னர் சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

இந்நிலையில், தனியார் துறையில் அவரது விரிவான நிபுணத்துவம் லங்கா சதொசவின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://ibctamil.com/article/new-chairman-of-lanka-sathosa-1728110983

NO COMMENTS

Exit mobile version