Home இலங்கை அரசியல் மட்டக்களப்பில் அதிபர் செயலகமாக மாறப்போகும் புதிய கட்டடம்: ரணில் எடுத்துள்ள தீர்மானம்

மட்டக்களப்பில் அதிபர் செயலகமாக மாறப்போகும் புதிய கட்டடம்: ரணில் எடுத்துள்ள தீர்மானம்

0

மட்டக்களப்பில் (Batticaloa) திறந்து வைக்கப்பட்ட மாவட்ட செயலகத்தை அதிபர் அலுவலகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட செயலகத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே, ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு, குறித்த பகுதியில் அதிபர் அலுவலகமொன்று இருப்பது சிறந்ததாக காணப்படும் என அவர் கூறியுள்ளார்.

அபிவிருத்தி நடவடிக்கை

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “நான் பிரதமராக இருந்த காலத்தில் மட்டக்களப்பில் புதிய மாவட்ட செயலகமொன்றை அமைக்குமாறு வஜிர அபேவர்தனவுக்கு பணிப்புரை விடுத்தேன்.

இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று நான் அழகான கட்டிடமொன்றை திறந்து வைத்தேன். எனினும், தற்போது இந்த கட்டிடடத்துக்கு அதிபர் அலுவலகத்தை கொண்டு வர தீர்மானித்துள்ளேன்.

மட்டக்களப்பில் பாரியளவான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நான் திட்டமிட்டுள்ளேன்.

இந்த நிலையில், இங்கு அதிபர் அலுவலகமொன்றை அமைப்பதன் மூலம் குறித்த நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version