Home இலங்கை பொருளாதாரம் இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர்

இறைவரித் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர்

0

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கான புதிய ஆணையாளர் நாயகம், நிதியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய டப்.ஏ.எஸ்.சந்திரசேகர, கடந்த பெப்ரவரி 28ம் திகதியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

இந்நிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் திணைக்களத்தில் விசேட தர அதிகாரியாக கடமையாற்றிய ஆர்.பி.எச்.பெர்னாண்டோ, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version