Home இலங்கை கல்வி கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவக் கற்கை தொடர்பில் புதிய தீர்மானம்

கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவக் கற்கை தொடர்பில் புதிய தீர்மானம்

0

கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் ராணுவ கடேற் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டுமே இனிவரும் காலங்களில் மருத்துவப்படிப்புக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசாங்கத்தின் ஏனைய பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் மருத்துவக் கற்கைகளுக்கான அனுமதியை கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

மேற்கொண்டுள்ள தீர்மானம்

எனினும் இனிவரும் காலங்களில் ராணுவத்தின் கடேற் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை மட்டும் அங்கு அனுமதிக்கும் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரி, ராணுவத்தின் உயர்கல்வி கற்கை நெறிகளுக்கான பல்கலைக்கழகமாக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version