Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

நாடாளுமன்ற அமர்வு ஆரம்பம் : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

0

இன்றைய நாளுக்கான (23.05.2025) நாடாளுமன்ற அமர்வுகள் காலை 09.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளன.

அதன்படி, காலை 9.30 முதல் 10 மணி வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் காலை 11.00 முதல் 11.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை11.30 முதல் மாலை 5.00 வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/4w9Mlq9LWFg

NO COMMENTS

Exit mobile version