Home இலங்கை சமூகம் கொழும்பு பிரிவுக்குப் புதிய பிரதி காவல்துறை மா அதிபர் நியமனம்

கொழும்பு பிரிவுக்குப் புதிய பிரதி காவல்துறை மா அதிபர் நியமனம்

0

புதையல் வேட்டை சம்பவத்துக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட பிரதி காவல்துறை மா அதிபர் உஜித் லியனகேவுக்குப் பதிலாக, ஜி.என்.டி சொய்சா பிரதி காவல் துறை மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. 

காவல்துறை மாஅதிபர்

இதற்கு மேலதிகமாக, நலன்புரி பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் பதவியையும் ஜி.என்.டி சொய்சா மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட பிரதி காவல்துறை மா அதிபர், நேற்று காவல்துறை தலைமையகத்திற்கு, காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரியவால் மாற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version