பிரசார செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 3,067 வேட்பாளர்கள் மீது சட்ட
நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகிறது.
இதில் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான மூன்று வேட்பாளர்களான பத்தரமுல்லே சீலரதன
தேரர், சரத் கீர்த்திசேன மற்றும் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோரும்
அடங்குவர்.
அத்துடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 18,888 வேட்பாளர்களில்
1,064 பேர் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறியுள்ளனர்.
பொலிஸ் விசாரணைகள்
அதேநேரம், உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட்ட 75,589 வேட்பாளர்களில்
2,000 பேர் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க தவறியுள்ளனர்.
13 நபர்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
விசாரணை கோப்புகளை தொகுத்து வழிகாட்டுதலுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு
காவல்துறை மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
