Home இலங்கை அரசியல் 2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி முறைமை அறிமுகம்

2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி முறைமை அறிமுகம்

0

2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன் அது
பரீட்சையை மையமாகக் கொண்ட மாதிரியிலிருந்து விலகி, செயலில் கற்றலை
ஊக்குவிக்கும் ஒரு கல்வி முறைமையை உருவாக்கும் என்று கல்வி அமைச்சர் பிரதமர்
ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், பரீட்சைக்கு தயாராவதை மையமாகக் கொண்ட
தற்போதைய முறைமை மாற்றப்படும் என்று விளக்கினார்.

க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை

இந்த புதிய முறைமையில், மாணவர்கள் பல்வேறு கற்றல் நடவடிக்கைகளில்
பங்கேற்பார்கள் மற்றும் ஒரு இறுதி பரீட்சையை எதிர்கொள்வதற்குப் பதிலாக
தொடர்ந்து மதிப்பீடு செய்யப்படுவார்கள்.

மறுசீரமைப்புகள் 2026 ஆம் ஆண்டு 1 மற்றும் 6 ஆம் தரங்களுக்கு
அறிமுகப்படுத்தப்படுவதுடன், ஒரு புதிய க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை 2029
ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த முறைமை மூன்று ஆண்டுகளுக்கு பரிசோதிக்கப்பட்டு கருத்து மற்றும்
சவால்களின் அடிப்படையில் சரிசெய்யப்படும் என் கல்விச் செயலாளர் நாலக கலுவெவ
கூறினார்.

வகுப்பறை அளவை 25–30 மாணவர்களாகக் குறைப்பது ஒரு முக்கிய மாற்றமாகும்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை குறித்து இறுதி முடிவு எதுவும்
எடுக்கப்படவில்லை, ஆனால் அது மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மன அழுத்தத்தைக்
குறைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version