கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் கார்த்திகை தீபம்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடர் 2 சீசன்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கார்த்திக் ராஜ் மற்றும் அர்திகா இருவரும் ஜோடியாக நடித்த முதல் சீசன் முடிவடைய இப்போது 2வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் நாயகனாக கார்த்திக் ராஜே நடிக்க புதிய நாயகி கமிட்டாகியுள்ளார். 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த தொடர் குறித்து புதிய தகவல் வந்துள்ளது.
புதிய என்ட்ரி
ஹிட்டாக ஓடும் இந்த கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் திலக மற்றும் நடிகை சுகன்யா என்ட்ரி கொடுக்க இருக்கிறார்களாம். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாக புதிய நடிகர்களுக்கு வாழ்த்து கூறு வருகின்றனர் ரசிகர்கள்.