Home இலங்கை சமூகம் இலங்கைக்கு புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ள நாடு

இலங்கைக்கு புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ள நாடு

0

இலங்கைக்கும் (Srilanka) போலாந்துக்கும் இடையில் புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமான சேவையை போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air) ஆரம்பித்துள்ளது.

வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் மாதத்தின் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் ஏர் கூறியுள்ளது.

புதிய விமான சேவை 

இந்நிலையில், அதன் முதல் விமானமானது நேற்றைய தினம்(30.10.2024) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதன்போது, இலங்கை சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நடன நிகழ்ச்சியுடன் அந்த விமானத்தில் வருகை தந்த பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விமான சேவையானது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/new-flight-service-between-sri-lanka-and-poland-1730372496

NO COMMENTS

Exit mobile version