Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்றங்களின் நகர முதல்வர்கள், தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றங்களின் நகர முதல்வர்கள், தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

0

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் நகர முதல்வர்கள், பிரதி நகர முதல்வர்கள், தவிசாளர்கள் மற்றும் பிரதி தவிசாளர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 21 மாவட்டங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையை பெற்ற அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்களால் குறித்த பதவிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களை வர்த்தமானியில் அறிவிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழு

அதன்படி, இந்த வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை இங்கே பார்வையிடலாம்.

இதேவேளை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், அந்தந்த நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்க வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version