Home இலங்கை அரசியல் திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

திருகோணமலை மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

0

Courtesy: H A Roshan

திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார இன்று (09) மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் 

2003.09.02 ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலாளர், மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சின் உதவி செயலாளர், மத்திய மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர்,மத்திய மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் (பதில் கடமை), ஹதரலியத்த மற்றும் தும்பன பிரதேச செயலாளர் ஆகிய பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.

அரசாங்க அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட முன்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியுள்ளார். 

முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதையடுத்து குறித்த வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version