Home இலங்கை அரசியல் ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

0

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அனுர விதானகமகே (Anura Widanagamage) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.ஜே.எம்.முஸம்மிலின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதிலாகவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

விதானகமகே முன்னர் ஊவா மாகாண சபை உறுப்பினராகவும், ஊவா மாகாண சபையின் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு, பெண்கள் விவகாரம் மற்றும் சமூக நலன் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து AJM முஸம்மில் (A.J.M. Muzammil) நேற்று (05) பதவி விலகினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மேயருமான முஸம்மில் 2019 நவம்பரில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டு, பின்னர் அவர் 2020 ஆகஸ்ட் மாதம் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள் 

NO COMMENTS

Exit mobile version