Home இலங்கை அரசியல் நுவரெலியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய புதிய சுயேட்சைக் குழு

நுவரெலியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்திய புதிய சுயேட்சைக் குழு

0

நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புதிய சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

“இனியாவது நமக்காக நாம்” என்ற அமைப்பின் ஊடாக இந்த சுயேட்சைக் குழுவினால் இன்று (08.10.2024) கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த சுயேட்சைக் குழுவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்திய ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டை வளப்படுத்துவதற்கு பல ஆண்டுகளின் பின்னர் ஒரு அதிசயம் நடந்தது
போல் ஒரு இடதுசாரி கொள்கையில் உள்ள ஒருவர் தேர்தல் மூலமாக ஜனாதிபதியாக ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றிணைந்துள்ள இளைஞர்கள்

அதேபோல், மலையகத்தில் அனைத்து பகுதிகளும் வெவ்வேறு மாற்றம் நிகழ வேண்டும் என்றால் நாடாளுமன்றத் தேர்தலில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அதற்காகவே, பழைய கட்சிகளை புறக்கணித்து இளைஞர்கள் ஒன்றிணைந்து
சுயேட்சையாக களம் இறங்கி உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version