Home இலங்கை அரசியல் புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே புதிய கடல்சார் முரண்பாடு

புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே புதிய கடல்சார் முரண்பாடு

0

Courtesy: Sivaa Mayuri

இந்தியப் பெருங்கடலில் உள்ள கோபால்ட் நிறைந்த ஃபெரோ மாங்கனீசு (Manganese) மேலோடுகளை ஆராய்வதற்கான உரிமைகளுக்காக ஜமேக்காவில் (Jamaica) உள்ள கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்ட சர்வதேச கடற்பரப்பு ஆணையத்திடம் இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை ஆட்சேபித்துள்ளது.

இதன் மூலம் புது டில்லிக்கும் கொழும்புக்கும் இடையே புதிய கடல்சார் முரண்பாடு உருவாகி வருவதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியா கோபால்ட் (Cobalt)நிறைந்த ஃபெரோமாங்கனீஸ் மேலோடுகளை ஆராய விரும்பும் பகுதி, முன்னதாகவே முழுவதுமாக இலங்கையின் நீடிக்கப்பட்ட கண்ட அடுக்கு உரிமைகோரலுக்கு உட்பட்டது என்று கொழும்பு வாதிட்டு வருகிறது.

கச்சத்தீவு 

இந்த பிரச்சினை தொடர்பில் அண்டை நாடுகள் இரண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருப்பினும், கடந்த ஒன்றரை தசாப்தங்களில் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை.

இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, கச்சத்தீவு தொடர்பான சர்ச்சையை மீண்டும் கிளப்புவதற்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) முயற்சித்து, காங்கிரஸையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கச்சத்தீவை விட்டுக்கொடுத்ததாகக் குற்றம் சாட்டியிருந்தது.

இதனை தொடர்ந்தே கோபால்ட் நிறைந்த மேலோட்டங்களை ஆய்வு செய்வது குறித்த புதிய சர்ச்சை உருவாகத் தொடங்கியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version