Home இலங்கை அரசியல் பதவியேற்ற புதிய அமைச்சர்கள் – பிரதி அமைச்சர்கள்

பதவியேற்ற புதிய அமைச்சர்கள் – பிரதி அமைச்சர்கள்

0

புதிய இணைப்பு

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

அதன்படி, 3 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 10 பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமைச்சரவை அமைச்சர்கள்

1.பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்

2.அனுர கருணாதிலக – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்

3. வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க – வீடமைப்பு , நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

1. அனில் ஜயந்த பெர்னாண்டோ – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்

2. டி.பி. சரத் – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்

3. எம்.எம். மொஹமட் முனீர் – சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்

4. எரங்க குணசேகர – நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்

5. முதித ஹங்சக விஜயமுனி – சுகாதார பிரதி அமைச்சர்

6. அரவிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

7. எச்.எம். தினிது சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்

8. யு.டி. நிஷாந்த ஜெயவீர
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்

9. கௌசல்யா அரியரத்ன
வெகுஜன ஊடக பிரதி அமைச்சர்

10.ஈ.எம். ஐ. எம். அர்காம்
எரிசக்தி பிரதி அமைச்சர்

முதலாம் இணைப்பு 

அநுர அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) அறிவித்துள்ளது.

இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் அவர்கள் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவை

இந்தநிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.

இதேவேளை கடந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் 18ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/7fgf5sq1f0M

NO COMMENTS

Exit mobile version