Home இலங்கை அரசியல் அநுரவின் நகர்வில் அவதானம் அவசியம்: வெளியான முன் எச்சரிக்கை

அநுரவின் நகர்வில் அவதானம் அவசியம்: வெளியான முன் எச்சரிக்கை

0

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவின் அரசியல் நகர்வு தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கூறப்படுகின்றது.

அதாவது நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் நெருக்கடியை ஏற்படுத்தியவர்கள் மீது கொண்ட கடும் கோபத்தின் விளைவே 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவாகும். இலங்கையை ஆண்ட கட்சிகள் மீதான வெறுப்பே ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் ஆட்சிமுறை 76 ஆண்டுகளில் வெள்ளைக்காரர்களிடம் சிக்கியிருந்த நிலையில் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என மக்கள் எண்ணி செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதாவது, மாற்று சிந்தனையை கொண்ட இளைஞர்கள் மத்தியில் நாடாளுமன்றத்தில் அநுர வெளியிட்ட சிறந்த கருத்துக்களால் மாற்று சக்தியாக அநுர அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தினையும், அரசாங்கங்களையும் விமர்சனம் செய்தவர்கள் கையில் தற்போது ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ள நிலையில், அவர்களின் அரசியல் நகர்வு குறித்து அவதானம் செலுத்த வேண்டுமெனவும் கூறப்படுகின்றது.

கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய அரசாங்கத்தின் நகர்வுகள் தொடர்பில் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version