Home முக்கியச் செய்திகள் மாற்றமடையப் போகும் பரீட்சை முறைகள்: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

மாற்றமடையப் போகும் பரீட்சை முறைகள்: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

0

பாடத்திட்டம் மற்றும் பரீட்சை முறைகள் உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026 முதல் செயல்படுத்தப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

நேர்மறையான மாற்றம்

முந்தைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி சீர்திருத்த திட்டங்களில் நேர்மறையான மாற்றங்களைச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் தற்போதுள்ள கல்வி முறை மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

அதன்படி, கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில் 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறைகள் மற்றும் பாடத்திட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

முக்கிய கவனம்

இதேவேளை, அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் போன்ற பாடங்களின் உள்ளடக்கத்தை மிகவும் பொருத்தமானதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பாடங்களை ஒருபோதும் நீக்கும் எண்ணம் இல்லை என்றும் கல்வி அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், கல்வி முறை மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்லப்படும் நேரத்தில், மூன்று துறைகளில் அவ்வாறு செய்ய விரும்புவதாகக் கூறிய பிரதமர், ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி பணியாற்றுவேன் என்றும் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version