இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ (Lasantha Rodrigo) சற்று முன்னர் இராணுவ தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
புதிய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் நேற்று (30) ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டது.
இராணுவத்தின் 25வது தளபதி
இதன்படி, லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (31) பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் 25வது தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ பதவியேற்கிறார்.
ஒரு அனுபவமிக்க இராணுவ அதிகாரியான ரொட்ரிகோ, முன்னர் இலங்கை இராணுவத்தின் பிரதி படைத் தளபதியாக பணியாற்றினார்.
அவர் முன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் பணியாற்றினார்.
கடற்படையின் புதிய தளபதி
இதேவேளை, இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட இன்றைய தினம் பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்.
இலங்கைக் கடற்படையில் 1989ம் ஆண்டு இணைந்து கொண்ட காஞ்சன பானகொட, அதிவேகத் தாக்குதல் படகுப் பிரிவின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுள்ளார்.
அதற்கு மேலதிகமாக வடமத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கட்டளைத் தளபதியாகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
கடற்படைத் தளபதி பதவியில் இருந்து அட்மிரல் பிரியந்த பெரேரா இன்றைய தினம் ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள நிலையில், ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட இன்றைய தினம் கடற்படைத் தளபதியாக பதவியேற்றுக் கொள்ளவுள்ளார்
அத்துடன் இன்று முதல் அவர் வைஸ் அட்மிரல் தரத்துக்குப் பதவி உயர்வு பெறவுள்ளார்.
மேலதிக தகவல் – அனதி