Home இலங்கை சமூகம் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் 11 பேருக்கு திடீர் இடமாற்றம்

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் 11 பேருக்கு திடீர் இடமாற்றம்

0

நாட்டிலுள்ள சிரேஷ்ட  காவல்துறை அதிகாரிகள் 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு காவல்துறை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பிரிவு நேற்று (07) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபர் உத்தரவு

இந்த நிலையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பின்வரும் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ.வி.கினிகே குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு வழங்கல் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து மாத்தறைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version