Home இலங்கை சமூகம் அநுர அரசின் மற்றுமொரு அதிரடி! டொலர்களுக்கு புதிய வரி

அநுர அரசின் மற்றுமொரு அதிரடி! டொலர்களுக்கு புதிய வரி

0

தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தரும் சேவைகளுக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் ஏப்ரல் முதல் 15 சதவீத வரி செயற்பாட்டுக்கு வரவுள்ளதாக, இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.

15 விடவும் அதிக வரி சதவீதத்திற்கான யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும் இந்த வரி கட்டாயம் விதிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


டொலர்கள்

சமகாலத்தில் நாட்டுக்குள் ஒன்லைன் ஊடாக அதிகளவான டொலர்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

சமூக வலைத்தளங்கள் மற்றும் fiverr போன்றவை ஊடாக திறமையான இளைஞர்கள் பாரிய அளவிலான டொலர்களை நாட்டிற்கு ஈட்டித்தருகின்றார்கள். இவ்வாறான முறையில் நாட்டிற்கு நன்மை ஏற்படுத்துபவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக ஏன் வரி விதிக்கப்படுகின்றது?” என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினர்.

“இதனை விடவும் அதிக வரியை அமுல்படுத்தவே யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும் எங்களால் இந்த சந்தர்ப்பத்தில் வரி அமுல்படுத்த நேரிட்டுள்ளது.

வரி சுமை

அவ்வாறு செய்யவில்லை என்றால் அதனை விடவும் கடுமையான வரிகளுக்கு செல்ல நேரிடும்.

மக்கள் மீது வரி சுமையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க நேரிட்டது.

எனினும் வேறு நிவாரணங்களை வழங்க முடியுமா என்பது குறித்து நிதி அமைச்சருடன் கலந்துரையாடல் மேற்கொண்டதன் பின்னர் அறிவிக்கின்றேன். தற்போதைக்கு இதனையே கூற முடியும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version