Home இலங்கை சமூகம் மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

மீண்டும் பேருந்துகளில் இருந்து நீக்கப்படவுள்ள அலங்கார பொருட்கள்..!

0

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இன்று (22.05.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இதனை குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், பேருந்துகளில் இருந்து கூடுதல் நவீனமயமாக்கல் பாகங்களை அகற்றும் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புதிய நடைமுறை

இதற்கிடையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதியை இன்று முதல் தொடங்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் குருநாகல் மற்றும் மீரிகம இடையேயான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் வெளியேறும் இடங்களில் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கட்டணங்களை செலுத்தலாம்.

இதற்கமைய, 35 இன்டர்சேஞ்ச்களிலும் 119 வெளியேறும் வாயில்களிலும் இதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version