கிழக்கில் இடம்பெறும் கைதுகள் தமிழ் மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அண்மையில் இடம்பெற்ற இனியபாரதி மற்றும் அவரது சகாக்களை தொடர்ந்து இன்னும் கைதுகள் இடம்பெற இருப்பதான உள்ளக தகவல்கள் உலாவிக்கிக்கொண்டிருக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் ஆயுத கலாசாரம் உச்சம் பெற்றிருந்த அந்த நாட்களில் இனியபாரதி நிகழ்த்தியதாக சொல்லப்படும் கொலைகள், கடத்தல்கள்தொடர்பாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இதன்போது துணையாக இருந்தவர்களே கைது செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விசாரணைகளில் பிள்ளையானின் வாக்குமூலம் ஒரு முக்கியமான அரச சாட்சியமாக இருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ibc தமிழின் இன்றைய அதிர்வு…
https://www.youtube.com/embed/Hx6Pas1SUfc
