நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் (Kane Williamson) சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இன்று அவர் உத்தியோகபூர்வமாக தனது ஓய்வை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
தமது ஓய்வு குறித்து அவர் தெரிவிக்கையில்,
எதிர்பார்த்ததைவிட, அதிக ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளேன்.
சர்வதேச டி20 போட்டி
மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. நிறைய அனுபவங்களையும் நியூசிலாந்து டி20 அணியில் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
35 வயதாகும் வில்லியம்சன் 2011 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை 93 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 18 அரை சதத்துடன் 2,575 ஓட்டங்களை பெற்றுள்ளார். அவர் 2,575 ரன்கள் குவித்து, நியூசிலாந்துக்காக அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்து டி20 அணிக்கு தலைவராக 75 போட்டிகளுக்கு கேன் வில்லியம்சன் தலைமை தாங்கினார். அவரது தலைமையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2016 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கும், 2021 இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
ரசிகர்களுக்கு அதிர்ச்சி
டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள கேன் வில்லியம்சன், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட உள்ளார்.
முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சனின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
