Home இலங்கை சமூகம் தொடருந்து இயந்திரம் செயலிழப்பு! மணித்தியால கணக்கில் காத்திருந்த பயணிகள்

தொடருந்து இயந்திரம் செயலிழப்பு! மணித்தியால கணக்கில் காத்திருந்த பயணிகள்

0

யாழ்ப்பாணம் கொழும்பு இடையேயான இரவுநேர தபால் தொடருந்து சேவை இயந்திரம் செயலிழந்த நிலையில் பெருமளவான பயணிகள் நேற்று(10) இரவு சுமார் மூன்று மணத்தியாலத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டடிருந்தது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ். கொழும்புக்கு இடையேயான இரவு நேர தினசரி தபால் சேவையானது நேற்று 10 ஆம் திகதி இரவு யாழ் காங்கேசன்துறையில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு 8:30 மணியளவில் யாழ் தொடருந்து நிலையத்தை அடைந்து பின்னர் கொழும்பு நோக்கி சேவையை ஆரம்பித்திருந்தது.

காத்திருந்த பயணிகள்

இந்நிலையில் பரந்தன் கிளிநொச்சிக்கு இடைப்பட்ட பகுதியில் தொடருந்து இயந்திரம் செயலிழந்ததுள்ளது, இதன் காரணமாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை பயணிகள் காத்திருந்த நிலையில் பலர் தொடருந்தை விடுத்து பேருந்துகளில் கொழும்பு நோக்கி பயணமாகினர்.

மேலும் ஏனைய நிலையங்களில் காத்திருந்த பயணிகளும் மாற்று வழிகளை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அதிகாலை 12:30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து வருகை தந்த மற்றுமொரு தொடருந்து இன்ஜின் மூலம் குறித்த தொடருந்து சேவை கிளிநொச்சி வரை தள்ளி செல்லப்பட்டு பின்னர் இயந்திரம் மாற்றப்பட்டு கொழும்பு நோக்கி பயணம் ஆரம்பமானது.

வடக்கு தொடருந்து மார்க்கத்திற்கான தொடருந்து சேவைகள் கடந்த காலங்களில் குறைக்க பட்டிருந்த நிலையில் சேவைகள் அதிகரிக்கபட்டு வினைத்திறனாக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்து வருகின்ற பொழுதிலும் இவ்வாறான அசௌகரியங்கள் தொடர்ந்து பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version