Home இலங்கை பொருளாதாரம் பேருந்து கட்டணங்கள் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

பேருந்து கட்டணங்கள் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

0

புதிய எரிபொருள் விலை உயர்வு இடம்பெற்றுள்ள போதிலும், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்.
இன்றைய தினம் நடைபப்ற ஊடக சந்திப்பில் அவர்இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நேற்றிரவு அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை உயர்வையடுத்து, இன்று கட்டண திருத்தம் பற்றி பரிசீலிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தை பயன்படுத்தி புதிய கட்டணங்கள் கணக்கிடப்பட்டதாகவும் கூறினார்.

எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தின்படி கணக்கிடப்பட்ட போதும், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப பேருந்து கட்டணங்களை மாற்றத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இந்த கட்டண மாற்ற முன்மொழிவு விமர்சிக்கப்பட்ட போதும், கணக்கீட்டுப்படி கட்டண உயர்வு தேவையற்றது எனத் தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version