Home சினிமா சைப் அலிகான் தாக்குதல் சம்பவம்.. ஒரு சிசிடிவி கூட இல்லாதது ஆச்சர்யம்: மும்பை போலீஸ்

சைப் அலிகான் தாக்குதல் சம்பவம்.. ஒரு சிசிடிவி கூட இல்லாதது ஆச்சர்யம்: மும்பை போலீஸ்

0

ஹிந்தியில் முன்னணி நடிகரான சைப் அலி கான் வீட்டில் நேற்று அதிகாலை புகுந்த திருடன் ஒருவன் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற சம்பவம் சினிமா துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் அட்மிட் ஆன சைப் அலி கானுக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் அவரது முதுகில் இருந்து கத்தி அகற்றப்பட்டது.

சைப் அலி கானை குத்திய நபர் போட்டோவும் வெளியிடப்பட்டு தற்போது அவனை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.

சிசிடிவி இல்லை

சைப் அலி கான் மற்றும் அவரது மனைவி கரீனா கபூர் மற்றும் குழந்தைகள் மும்பை பாந்த்ராவில் இருக்கும் Satguru Sharan என்னும் அபார்ட்மெண்டில் தான் வசித்து வருகின்றனர்.

அவர்களது floorல் ஒரு சிசிடிவி கூட இல்லாமல் இருப்பது ஆச்சர்யமாக இருப்பதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் வீட்டின் entranceல் கூட எந்த ஒரு பாதுகாவலரும் இல்லை எனவும் கூறி இருக்கின்றனர்.

ஒரு முன்னணி நட்சத்திரம் பாதுகாப்பு விஷயத்தில் இப்படி இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக மும்பை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version