Home இலங்கை அரசியல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு

0

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தனது முடிவை சபாநாயகர் இன்று (10) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அந்த வகையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைய குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை பொருந்தாததால் மற்றும் அது உரிய முறையில் இல்லாதததாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டினார்.

இதன்போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நிலையியல் கட்டளைகளின் கீழ், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ள சட்டமா அதிபர் மற்றும் செயலகத்தின் அறிக்கையை சபைப்படுத்துமாறு கோரினார்.

NO COMMENTS

Exit mobile version