Home இலங்கை அரசியல் பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம! வெளியான தகவல்

பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம! வெளியான தகவல்

0

அரசியலமைப்பு மற்றும் பல்வேறு கட்டளைச் சட்டங்கள், பிரதி அமைச்சர் ஒருவருக்கு
எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழியும் சாத்தியக்கூறுகளை
தெளிவாகக் குறிப்பிடவில்லை என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு
எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழியும் சாத்தியக்கூறுகள் குறித்து
நாடாளுமன்றச் செயலகம் உறுதியான கருத்தைத் தெரிவிக்கவில்லை என்று
தெரிவிக்கப்படுகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்

அதன்படி, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதிப்பதா இல்லையா என்பது குறித்து
சபாநாயகரே முடிவெடுக்க வேண்டும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை முன்மொழியும் விதம் மற்றும் அது தொடர்பான சட்ட
நிலை குறித்து அரசியலமைப்பின் பல்வேறு விதிகள் மற்றும் கட்டளைகளை சபாநாயகரிடம்
சுட்டிக்காட்ட நாடாளுமன்ற செயலகம் காத்திருக்கிறது என்று அறியமுடிகிறது.

NO COMMENTS

Exit mobile version