Home இலங்கை அரசியல் பொது வேட்பாளர் களமிறக்கம் குறித்து தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி உப தலைவி...

பொது வேட்பாளர் களமிறக்கம் குறித்து தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி உப தலைவி கூறியுள்ள விடயம்

0

ஜனாதிபதி தேர்தலில் (Presidential Election) இதுவரைக்கும் ஒரு
பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தமது கட்சி இன்னமும் எதுவித தீர்மானமும் எடுக்கவில்லை என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி உப தலைவி தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட மண்முனை தென் மேற்கு
பிரதேசக் கிளையின் மகளிர் அணி நிர்வாகத் தெரிவு பட்டிப்பளையில் இடம்பெற்றுள்ளது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

பல பண மோசடி சம்பவங்கள்: நீக்கப்படும் இணையத்தளங்கள்

ஜனாதிபதித் தேர்தல்

மேலும் தெரிவிக்கையில், பொது வேட்பாளர் விடயம் தொடர்பில் எமது கட்சி சார்ந்து வெளிவரும்
கருத்துக்களில் எதுவித உண்மைத் தன்மையும் இல்லை.

தமிழரசுக் கட்சியோ, எமது கட்சியின் மகளிர் அணியோ எதிர்வரும் ஜனாதிபதித்
தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவதற்குரிய எதுவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான
ஞா.சிறிநேசன், பா.அரியநேந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதேச நிர்வாகிகள்,
மாவட்ட மகளிர் அணி நிர்வாகம் மற்றும் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் எனப்பலர்
கலந்து கொண்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஏற்படவுள்ள சிக்கல்

ஏழு உயிர்களை காவு கொண்ட கோர விபத்து! சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அதிர்ச்சி தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   

NO COMMENTS

Exit mobile version