Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியின் முடிவில் குழப்பம் இல்லை: சுமந்திரன் திட்டவட்டம்

தமிழரசுக் கட்சியின் முடிவில் குழப்பம் இல்லை: சுமந்திரன் திட்டவட்டம்

0

இலங்கை (Srilanka) ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிப்பதாக தமிழரசுக் கட்சி (ITAK) எடுத்த தீர்மானத்தில் எந்தவித குழப்பமும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தமது எக்ஸ் தளத்தில் இந்த விடயம் தொடர்பில்  குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக கடந்த செப்டெம்பர் 1ஆம்திகதி முடிவு எடுக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சி

வவுனியாவில் இதனை தமிழரசுக் கட்சி, உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

எனவே, நான் உட்பட எமது கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் நிலைப்பாடும் அதுதான். அந்த நிலைப்பாடு குறித்து எந்த குழப்பமும் இல்லை” என பதிவிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version