Courtesy: Sivaa Mayuri
சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) முன்மொழியப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் வரியை ஏற்கப்போவதில்லை என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJP) தெரிவித்துள்ளது.
வீட்டு உரிமையாளர்களின் வரி நியாயமற்றது என்றும் அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா (Harsha De Silva) தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான ஒப்பந்தம்
புதிய அரசாங்கம் பதவியேற்றால் இலங்கையுடனான ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
இந்தநிலையில்; ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படும் என்றும் அது ஆட்சிக்கு வந்தால் உடன்படிக்கையின் சில அம்சங்கள் தொடர்பில் மீளப் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்த வீட்டு உரிமையாளர்களின் வரிக்கு ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாது என்றும் ஹர்ச டி சில்வா உறுதியாக கூறியுள்ளார்.