Home இலங்கை பொருளாதாரம் வரியின்றி இலங்கைக்கு வரும் டெஸ்லா கார்கள்! வெளியான விலை பட்டியல்

வரியின்றி இலங்கைக்கு வரும் டெஸ்லா கார்கள்! வெளியான விலை பட்டியல்

0

டெஸ்லா உட்பட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உயர்தர மின்சார வாகனங்கள் இலங்கைக்கு வரியின்றி நுழைய அனுமதி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு இலங்கையில் வரியில்லா இறக்குமதியை அனுமதிப்பதற்கான ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

குறித்த பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது விதித்த இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டது.

விலை பட்டியல்

பேச்சுவார்தைகளில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டால் டெஸ்லா, ஃபோர்ட், செவ்ரோலெட் மற்றும் ஜீப் போன்ற அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உயர்தர வாகனங்கள் இலங்கை சந்தைக்குள் வரியின்றி இறக்குமதி செய்யப்படும்.

இருப்பினும், அமெரிக்கத் தரப்பிலிருந்து வந்த இந்த முன்மொழிவுக்கு இலங்கை அரசு முழுமையான ஒப்புதல் அளிக்கவில்லை.

இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்களின் போது, இலங்கை அரசு இந்த முன்மொழிவை படிப்படியாக பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், திட்ட முன்மொழிவு செயற்படுத்தப்பட்டால் தோராயமாக கணக்கிடப்பட்ட டெஸ்லா வாகனங்களின் விலை பட்டியல் வெளியாகியுள்ளது.

டெஸ்லா மொடல் 3 – $44,130 – ரூ. 13,239,000

டெஸ்லா மொடல் Y – $46,630 – ரூ. 13,989,000

டெஸ்லா மொடல் S – $86,630 – ரூ. 25,989,000

டெஸ்லா மொடல் X – $91,630 – ரூ. 27,489,000

டெஸ்லா மொடல் – $79,990 – ரூ. 23,997,000 

NO COMMENTS

Exit mobile version