Home இலங்கை அரசியல் பேரிடரை எதிர்கொள்ள எந்த நிறுவனமும் தயாராக இருக்கவில்லை – ஜனாதிபதி

பேரிடரை எதிர்கொள்ள எந்த நிறுவனமும் தயாராக இருக்கவில்லை – ஜனாதிபதி

0

அண்மைய பேரிடரை எதிர்கொள்ள எந்த நிறுவனமும் தயாராக இல்லை, அத்துடன் இவ்வளவு
பெரிய அவசரநிலைக்கு பதிலளிக்கும் திட்டங்களை யாரும் வகுக்கவில்லை என்று
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நெருக்கடியை எதிர்கொள்ளும்போது அனர்த்த முகாமை சட்டத்தின்படி அரசாங்கம்
செயல்படவில்லை என்று எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.

அவசர காலநிலை 

எனினும் உண்மையில், பேரிடர் மீட்புக்கு பொறுப்பான எந்த நிறுவனமும் இந்த வகையான
சூறாவளியை எதிர்கொள்ள தேவையான திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை என்று ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வெள்ளத்தை நிர்வகிக்க தேசிய பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ்
செயல்பட வேண்டியிருந்தது.

இதன் காரணமாகவே எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு அமைய
அவசரநிலையை அறிவித்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வெள்ளம் – குறிப்பாக மண்சரிவுகள் என்பன, படிப்படியாக
ஸ்திரத்தன்மையை மீண்டும் பெற்று வந்த இலங்கை பொருளாதாரத்திற்கு, மீண்டும் ஒரு
அடியாக அமைந்துவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version