நான் அநுர அரசாங்கத்துடன் இணைந்து ஒருபோதும் பதவிகளைப் பெற்றுக்கொள்ள
மாட்டேன். எனினும், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு எனது ஆதரவு வழங்கப்படும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டை நாசமாக்கியதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே எதிர்வரும் 21ஆம்
திகதி நுகேகொடையில் ஒன்றுகூடுகின்றனர்.
இனி என்ன செய்யப் போகின்றனர்
இந்தத் தரப்பை நம்புவதற்கு நாட்டு
மக்கள் தயாரில்லை.
இந்த நாட்டை மேற்படி தரப்பினரே மாறி, மாறி ஆட்சி செய்தனர்.
அந்தக் காலப்
பகுதியில் இவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியவில்லை. இவர்கள் இனி என்ன
செய்யப் போகின்றனர் என்றும் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
