Home முக்கியச் செய்திகள் எதுவித மோதல்களும் இல்லை..! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

எதுவித மோதல்களும் இல்லை..! அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

0

அரசாங்கத்திற்குள் எந்த உள் மோதல்களும் இல்லை என அமைச்சர் கே.டி. லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் உறுதி செய்யப்பட்ட அதிகாரம் 

அத்துடன், அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் குறித்த கூற்றுகளை நிராகரித்த அமைச்சர், அத்தகைய கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்றும், அவற்றைப் பரப்புபவர்களின் தலைகளை சோதனை செய்ய வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தேசிய மக்கள் சக்தி கட்சியின் விரிவாக்கம் முடிந்தது. கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டை நாங்கள் பெற்றுள்ளோம்.

எங்கள் வேட்பாளர் வ்ரே காலி பால்தசார் ஏற்கனவே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதை உத்தியோகபூர்வமாக்குவதற்கு மாத்திரமே உள்ளது.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version