Home இலங்கை பொருளாதாரம் பாரிய திட்டங்களுக்கான நிதி தொடர்பில் ஜனாதிபதியின் யோசனை

பாரிய திட்டங்களுக்கான நிதி தொடர்பில் ஜனாதிபதியின் யோசனை

0

அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களை ஏலம் எடுக்க
எதிர்பார்க்கும் உள்ளூர் ஒப்பந்தக்காரர்கள், உள்ளூர் வங்கிகளிடமிருந்து
கடன்களை பெறுவதற்குப் பதிலாக நிதி அல்லது வெளிநாடுகளில் இருந்து கடன்களைக்
கொண்டு வரும் யோசனையொன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்துள்ளார்.

உள்ளூர் ஒப்பந்ததாரர்கள், அரச வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்றால்,
கிராமப்புற வீதித்திட்டங்கள் போன்ற ஏனைய அபிவிருத்தி திட்டங்களுக்கான
நிதியுதவி நிறுத்தப்படலாம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன அரச கட்டுமான நிறுவனம்

கடவத்தை மற்றும் மிரிகம இடையிலான மத்திய அதிவேக வீதித் திட்டத்தின் பகுதியளவு
கட்டப்பட்ட முதல் கட்டத்தை முடிக்க, சீன அரசுக்குச் சொந்தமான மெட்டலர்ஜிகல்
கோர்ப்பரேஷன் ஒஃப் சீனா லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனத்தை, அரசாங்கம்
தேர்ந்தெடுத்துள்ளதை அடுத்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த திட்டத்தை வீதி அபிவிருத்தி ஆணைக்குழு, உள்ளூர் ஏலதாரர்களிடம்
ஒப்படைக்க முன்மொழிந்தது, ஆனால் பல்வேறு காரணங்களால் சீன நிறுவனத்துடன் இந்த
திட்டத்தை தொடர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மிரிகம அதிவேகப்பாதையின் அடுத்தக்கட்ட பணிகள்

இந்த நிலையில் 37 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட கடவத்தை – மிரிகம
அதிவேகப்பாதையின் அடுத்தக்கட்ட பணிகள், அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

NO COMMENTS

Exit mobile version