Home இலங்கை அரசியல் ஆடம்பர நாற்காலியை புறமொதுக்கிய அநுர தரப்பு பிரதேச சபை தலைவர்

ஆடம்பர நாற்காலியை புறமொதுக்கிய அநுர தரப்பு பிரதேச சபை தலைவர்

0

பிபில பிரதேச சபையின் ஆரம்ப அமர்வு நேற்று (06) தொடங்கியது.இதன்போது குறித்த பிரதேச சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய மக்கள் கட்சியின் சரத் விதானகமகே, தனக்கென ஒதுக்கப்பட்ட ஆடம்பர நாற்காலியை அகற்றிவிட்டு, சாதாரண பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

 அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிபில பிரதேச சபையின் 18 ஆசனங்களில் 10 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியது.

கன்னி அமர்வை புறக்கணித்த மொட்டு உறுப்பினர்

 நேற்று நடைபெற்ற இந்த தொடக்க அமர்வில் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 17 உறுப்பினர்கள் பங்கேற்றனர், அதே நேரத்தில் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் பங்கேற்கவில்லை.

NO COMMENTS

Exit mobile version