Home இலங்கை அரசியல் அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது..! ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு

அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது..! ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு

0

சமூக முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் யாராலும் மாற்ற அனுமதிக்காது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் நேற்று (25) அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக அரசியலில் இணையும் உள்ளூராட்சி நிறுவனங்களின் கதவுகளைத் திறக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3,926 உறுப்பினர்களில் இருந்து நாட்டைப் பொறுப்பேற்கும் ஒரு தலைவர் உருவாக வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் ஆணை

உறுப்பினர்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டவுடன் 152 உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் 115 சபைகளின் அதிகாரம் நிறுவப்படும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மக்கள் ஆணையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கே உள்ளது என்றும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராகச் செயல்படும் குப்பைக் குவியல்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவதற்கான மக்கள் ஆணையைப் பெறவில்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version