Home இலங்கை சமூகம் தோட்டத் தொழிலாளருக்கு சம்பள உயர்வு தேவையில்லை! கிட்ணன் செல்வராஜ்

தோட்டத் தொழிலாளருக்கு சம்பள உயர்வு தேவையில்லை! கிட்ணன் செல்வராஜ்

0

தோட்டத் தொழிலாளருக்கு இரண்டாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தற்போதைக்குத் தேவையில்லாத விடயம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கிட்ணன் செல்வராஜ், தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

 1700 ரூபா சம்பள அதிகரிப்பு

நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் தோட்டத் தொழிலாளரின் நாளாந்த சம்பளத்தை இரண்டாயிரம் ரூபாவாக அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியது உண்மைதான்.

ஆனால் தற்போதைக்கு எங்கள் அரசாங்கம் பொருட்களின் விலைகளை கணிசமாக குறைத்துள்ளது.வேறு வசதிகளையும் ஏற்பாடு செய்து தந்துள்ளது.

அதன் காரணமாக தற்போதைக்கு தோட்டத் தொழிலாளருக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பே போதுமானது.

இரண்டாயிரம் சம்பள அதிகரிப்பு தற்போதைக்குத் தேவையற்றது என்றும் கிட்ணன் செல்வராஜ் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version