Home இலங்கை அரசியல் பிரச்சினைகளை தீர்க்க அவசரப்பட முடியாது..! பிரதமர் ஹரிணி

பிரச்சினைகளை தீர்க்க அவசரப்பட முடியாது..! பிரதமர் ஹரிணி

0

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அரசியல்வாதிகளால் பாதுகாக்கப்பட்டமை
காரணமாகவே, கடந்த காலங்களில் இலங்கையின் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை
ஒழிக்க முடியவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு கொலன்னாவையில் நடைபெற்ற தேசிய
மக்கள் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் 

கொலன்னாவ என்பது சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தின் இடமாக மாறிவிட்டது.
அரசியல்வாதிகள் அதை நடக்க அனுமதித்ததன் காரணமாகவே இது நடந்தது என்று பிரதமர்
குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு வழங்கப்படும் அரசியல்
பாதுகாப்பு குறித்த விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர்
தெரிவித்துள்ளார்.

நாட்டின் தொடர்ந்து தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே தேசிய மக்கள்
சக்தி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இருப்பினும், அவற்றை மேற்கொள்ள அவசரப்பட முடியாது என்றும் பிரதமர்
குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version