ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களிடம் கடன் செலுத்துகை தொடர்பான மூலோபாயத் திட்டங்கள் கிடையாது என தொழிலதிபரும் ஜனாதிபதி வேட்பாளருமான திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் (Anuradhapura) இன்று (25.08.2024) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுக் கொண்டு பலரும் ஊழலை இல்லாதொழிப்பது பற்றி பேசுவதாக கூறியுள்ளார்.
வேட்பாளர்களது வருமானம்
ஜனாதிபதி வேட்பாளர்களது மாதாந்த வருமானத்தை பார்த்த போது, தமக்கு கவலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வேட்பாளர்கள் மாதமொன்றுக்கு ஒன்று, இரண்டு இலட்சத்தில் வாழ்வதாகத் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பொருளாதாரம்
மக்களினால் வாழ முடியாத தொகையில் இவர்கள் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அனைவரும் கறுப்பு பொருளாதாரத்தின் பங்குதாரர்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உழைக்கும் வருமானத்தில் இவர்கள் வரி செலுத்தியதில்லை என திலித் ஜயவீர, ஏனைய வேட்பாளர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.