Home இலங்கை அரசியல் வடகிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்கின்றோம்: பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

வடகிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகளை ஏற்றுக்கொள்கின்றோம்: பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

0

ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் வடகிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு
அரசியல் கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்கின்றோம். அத்துடன் இலங்கையில் அனைவருக்கும் சமமான உரிமை உண்டு என்பதையும்
ஏற்றுக்கொள்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள்
சக்தியின் முக்கியஸ்தருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று 17 இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் இந்த பகுதியில் எமக்கான ஆதரவாளர்கள்
அதிகரித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் பலர் எம்முடன்
இணைந்து போட்டியிட வந்தனர்.மஸ்தான் வன்னியில் போட்டியிடக்கேட்டார். தாம்
பணத்தை செலவு செய்வதாக சொன்னார். அதுபோல் அங்கஜன் இராமநாதன் கோட்டார்.
அவர்களுடைய தந்தையிடம் நாங்கள் மறுத்து விட்டோம். எமது கட்சிக்கான கொள்கை
உண்டு.அதன்படி பயணிப்போம்.

 

நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்குமுறை

நாடாளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்குமுறை இல்லை
என சிலர் போலி பிரசாரம் செய்கின்றார்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த
திட்டம் அது. விகிதாசார தேர்தல் முறையில் அது உள்ளது. அந்த முறையின் கீழ் நாம்
போட்டியிடும் போது அதனை ஏற்கின்றோம். அந்த அடிப்படையிலேயே உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்படுவார்கள்.

தமிழ் மக்களின் அதிகாரபகிர்வு தொடர்பாக ரில்வின் சில்வா ஒரு அறிக்கை விட்டது
தொடர்பாக நான் கேள்விப்படவில்லை. அவ்வாறான ஒரு கருத்தை ரில்வின் சில்வா
சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கவில்லை.

உண்மையில் நாம் ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் வட- கிழக்கு மற்றும் மலையக
தமிழ் மக்களுக்கு அரசியல் கலாசார அசாதாரணங்கள் இந்த நாட்டில் ஏற்பட்டதென்பதினை ஏற்றுக்கொள்கின்றோம்.

இலங்கையில் தேசிய ஒற்றுமை இல்லை என்ற பிரச்சினை உண்டு.

ஆனால், கடந்த காலங்களில் நாம் சொன்னோம் என பாரிய பொய்களை சொன்னார்கள்.
முஸ்லிம்கள் தாடி வளர்க்க முடியாது. பள்ளி செல்லமுடியாது என்றெல்லாம்
சொன்னார்கள். நான் நினைக்கிறேன் இந்த கருத்தும் அவ்வாறான ஒன்றாக
இருந்திருக்கும்.

இலங்கையில் அனைவருக்கும் சமமான உரிமை உண்டு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அது எமது கொள்கைகளிலும் ஒன்று. அடுத்து அனைவருக்குமான நீதி
சமமானதாக இருக்க வேண்டும். புத்தகத்தில் மாத்திரம் அல்ல செயற்பாட்டிலும் அது
இருக்க வேண்டும்.

 

13 ஆவது திருத்தம் 

தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசார உரிமைகள் ஒழுங்காக பாதுகாக்கப்படவில்லை அதை
ஏற்றுக்கொள்கின்றோம். அதனை பாதுகாப்பதற்காகவே 13 வது திருத்தம் இந்தியாவினால்
கொண்டு வரப்பட்டிருந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் தமிழ்,
முஸ்லிம் மக்கள் நினைக்கின்றார்கள் அந்த சீர்சிருத்தம் மாத்திரம் இருந்தால்
போதும் என்று.

ஆனால், நாங்கள் புதிய ஒரு அரசியல் யாப்பினை கொண்டு வருவோம். அதனூடாக அனைவரது
உரிமைகளும் பாதுகாக்கப்படும். அது வரைக்கும் மாகாணசபை முறைமையை பாதுகாப்போம்.
அந்த தேர்தலும் நடாத்தப்படும்.

கடக்கின்ற ஒரு வருடத்திற்குள் மிகச்சிறந்த விவாதங்களுக்கு பின்னர் பலரது
ஆலோசனைகளை பெற்று சரியான ஒரு அரசியலமைப்பு முறையினை இந்த நாட்டில்
உருவாக்குவோம்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட லலித், குகன் மற்றும்
திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட மாணவர்கள் தொடர்பாக தற்போதே விசாரணைகளை
ஆரம்பித்துள்ளோம். தராக்கி சிவராம் அவர்களுடைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 வாரங்களே ஆகின்றது. எனினும் இதற்கான விசாரணைகளை
முன்னெடுத்துள்ளோம். அத்துடன் அரசியல் கைதிகள் அனைவரும்
விடுவிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version