Home இலங்கை அரசியல் வட மாகாண ஆளுநராக பதவியேற்ற நா. வேதநாயகம்: குவியும் வாழ்த்துக்கள்

வட மாகாண ஆளுநராக பதவியேற்ற நா. வேதநாயகம்: குவியும் வாழ்த்துக்கள்

0

வடமாகாண ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகத்திற்கு  (Nagalingam Vedanayagam) சர்வதேச இந்து மத பீடம்
வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதாக அதன் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

அநுர தலைமையில் அமைந்த புதிய அரசாங்கத்தின் 09 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், வடக்கு மாகாண ஆளுநராக (Governor of Northern Province)  யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர்

இவர் நேற்றையதினம் (26) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், ஆளுநருக்கு சர்வதேச இந்து மத பீடம்
வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதாக அதன் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.

அரசாங்க அதிபராக அவர் பதவி வகித்த காலத்தில் மிகுந்த நேர்மையாகவும் மக்களுக்காக அர்ப்பணிப்புடனுமான சேவையிலும் ஈடுபட்டவர் என்பது தமிழ் பேசும்
மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அவரது அந்த உண்மையான உழைப்புக்கும்
நேர்மைக்கும் இந்த ஆளுநர் பதவி கிடைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது அவரது
சேவை தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும் என்று அந்த வாழ்த்துச்
செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version