Home இலங்கை சமூகம் வடக்கு தொடருந்து சேவை நேரங்களில் மாற்றம்: வெளியானது அறிவிப்பு

வடக்கு தொடருந்து சேவை நேரங்களில் மாற்றம்: வெளியானது அறிவிப்பு

0

வடக்கு தொடருந்து சேவைகளின் இயக்க நேரங்களை மாற்றியமைக்க இலங்கை தொடருந்துகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வடக்கு தொடருந்து பாதைகளில் பயணிக்கும் பொதுமக்களின் கடுமையான கோரிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, வார இறுதி நாட்களில் மட்டுமே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தொடருந்து, நாளை (07) முதல் கல்கிஸ்ஸைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் தினமும் இயக்க தொடருந்து திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்தேவி தொடருந்து நேரம் 

இதற்கு இணையாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு தினமும் காலை 05.45 மணிக்கு இயக்கப்படும் யாழ்தேவி தொடருந்தின் புறப்படும் நேரமும் நாளை முதல் திருத்தப்பட்டுள்ளது.

யாழ்தேவியின் கொழும்பு கோட்டையிலிருந்துபுறப்படும் நேரம் காலை 06.40 மணியாக திருத்தப்பட்டுள்ளது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version