Home இலங்கை அரசியல் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

0

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரினால், 2025.02.10ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2423/04 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரினி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விசேட நாடாளுமன்ற அமர்வு

இதற்கமைய அன்றையதினம் நாடாளுமன்ற, மு.ப 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.

அன்றையதினம், உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானம் சபாநாயகரினால் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த சட்டமூலத்தை ஆராயும் நோக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும் அன்றையதினமே (14) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version